உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெற்றி பெற்றவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்

வெற்றி பெற்றவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தம்பாளையம் கிராமத்தில், கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. புவனகிரி ஒன்றிய முன்னாள் துணை சேர்மன் வாசுதேவன் தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள் முன்னிலை வகித்தனர். கைப்பந்து போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு, பாண்டியன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.விழாவில், பரங்கிப்பேட்டை நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஷ், நிர்வாகிகள் செழியன், மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !