ஜெ., பேரவை சார்பில் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவி
சிதம்பரம்: சிதம்பரத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில், பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட அவை தலைவர் குமார் முன்னிலை வகித்தார். செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். விழாவில், நிர்வாகிகள் தில்லை கோபி, சண்முகம், சுந்தர், ரங்கம்மா, கருணா, செல்வம், சுந்தரமூர்த்தி, பாலகிருஷ்ணன், ரங்கசாமி, செந்தில்குமார், நாகராஜ், மருதுவாணன், தமிழரசன், மணிகண்டன், சந்தோஷ் பங்கேற்றனர்.