பருவமழை முன்னெச்சரிக்கை பாலங்களில் துார்வாரும் பணி
புவனகிரி: புவனகிரி பகுதியில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்கள் மற்றும் சாலைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டது. குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்திற்குட்பட்ட புவனகிரி பகுதி பாலத்தின் உள் பகுதியில் வளர்ந்துள்ள செடிகளை பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகற்றி, மழைநீர் சீராக செல்வதற்கான பணிகள் நடந்தது. சாலை ஓரங்களில் உள்ள முட்செடிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் வளைவில் உள்ள செடிகள், முட்புதற்களை அகற்றும் பணிகள் நடந்தது. புவனகிரி பங்களா வளாகத்தில் மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணிகள் நடந்தது. இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் பரமேஸ்வரி, உதவி பொறியாளர் ஜெகன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர்.