கொலை வழக்கில் கைதானவர் வீட்டில் மொபட் எரிப்பு
கடலுார் : கடலுார் அருகே கொலை வழக்கில் கைதான வாலிபர் வீட்டில் நிறுத்தியிருந்த மொபட் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் அடுத்த டி.புதுாரை சேர்ந்தவர் நாகராஜ் மகன் அப்புராஜ்,22; எம்.புதுாரைச் சேர்ந்தவர் பாலகுரு மகன் சரண்ராஜ்,22; இருவரும் கடந்த ஜன., 22ம் தேதி மாயமாகினர். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ்,22, என்பவர், தனது தங்கையை பற்றி தவறாக பேசியதால், இருவரையும் கொலை செய்து, விருத்தாசலம் அருகே மணல்குவாரியில் புதைத்தது தெரிந்தது.இவ்வழக்கில் பால்ராஜ், எம்.புதுார் தருண்குமார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், எம்.புதுாரில் தருண்குமார் வீட்டில் நிறுத்தியிருந்த மொபட்டை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதுகுறித்து அவரது தந்தை தமிழ்செல்வன் கொடுத்த புகாரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து பைக் எரித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.