கொசு ஒழிப்பு பணி
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் கொசு தொல்லை அதிகமானது. தினமும் இரவு நேரங்களில் கொசுக்கடியால் பொதுமக்கள் துாங்க முடியாமல் சிரமப்பட்டனர். இது தொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்தது. பேரூராட்சி நிர்வாக அலுவலர் கணேசன், சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் ஆகியோர் தலைமையில் கொசு மருந்து அடிக்கும் பணி நேற்று நடந்தது. சின்னசேலம் பகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் வாகனங்கள் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டது. துப்புரவு ஆய்வாளர்முத்துக்குமரன், ரமேஷ், சீனிவாசன் மற்றும் செல்வம் ஆகியோர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.