மேலும் செய்திகள்
வாலிபர் சங்க மாநாடு
14-Aug-2025
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவிலில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க17வது மாவட்ட மாநாடு 6ம் தேதி துவங்கி இரு நாட்கள் நடந்தது. முதல் நாள், மாநாட்டு பேரணியை பொதுச் செயலாளர் ராதிகா துவக்கி வைத்தார். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி, சீரணி அரங்கத்தில் முடிவடைந்தது. பேரணியில் மத்திய அரசின்மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ராதிகா, மாநில பொருளாளர் பிரமிளா மாநில செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் மேரி, மாவட்ட தலைவர் மல்லிகா, மாவட்ட செயலாளர் மாதவி, நிர்வாகிகள்முத்துலட்சுமி, ரேவதி, அன்புச்செல்வி, ஜெயசித்ரா, சாந்தகுமாரி உள்ளிட்ட மாத சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
14-Aug-2025