உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே மாணவி பலாத்கார சம்பவத்தை கண்டித்து, ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சோழத்தரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஜனநாயக மாதர் சங்க ஸ்ரீமுஷ்ணம் வட்ட செயலாளர் ரேணுகா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மல்லிகா, துணை தலைவர் தேன்மொழி, மாவட்ட நிர்வாகி சிவகாமி, அன்புசெல்வி, மாவட்டக்குழு உறுப்பினர ஜெயந்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், கடலுார் மாவட்டத்தில் கல்வி நிலையங்கள், பள்ளிகளில் மாணவிகள் மீது தொடரும் பாலியல் வன்புணர்வுகளுக்கு அரசு முடிவு கட்ட வேண்டும். சேத்தியாத்தோப்பு அருகே பலாத்காரம் செய்யப்பட்டு பாதிப்பிற்குள்ளான மாணவிக்கு ரூபாய் 10 லட்சம் அரசு வழங்க வேண்டும். வர்ஷா கமிஷன் பரிந்துரையின்படி வழக்கினை விசாரணை செய்து ஆறுமாதத்திற்குள் குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது,இதில் காட்டுமன்னார்கோவில் வட்டத்தலைவர் புனிதவல்லி, சசிகலா, மாலதி பிச்சம்மாள் , இளவரசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை