மேலும் செய்திகள்
சேதமடைந்த மேன்ேஹால் சாலையில் ஓடும் கழிவுநீர்
11-Dec-2024
விருத்தாசலம் : எம்.புதுார் - பிஞ்சனுார் சாலை கடந்த இரண்டு நாட்களாக வெள்ள நீரால் துண்டிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த எம்.புதுார் - பிஞ்சனுார் கிராம இணைப்பு சாலை வழியாக பைக், வேன், லாரி உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.விருத்தாசலம் பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த இணைப்பு சாலையின் குறுக்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், இந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எம்.புதுார் கிராமத்தில் இருந்து 2 கி.மீ., துாரம் உள்ள பிஞ்சனுார் கிராமத்திற்கு எடைச்சித்துார் வழியாக 12 கி.மீ., துாரம் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இந்த சாலையை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
11-Dec-2024