உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேறும், சகதியுமான சாலை: கிராம மக்கள் கடும் அவதி

சேறும், சகதியுமான சாலை: கிராம மக்கள் கடும் அவதி

விருத்தாசலம்: எ.வடக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில், சேறும் சகதியுமாக உள்ள சிமென்ட் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் அடுத்த எருமனுார் ஊராட்சி எ.வடக்குப்பம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் 25 ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. தற்போது, இந்த சாலை முற்றிலும் உள்வாங்கியுள்ளது. இதனால், மழைக்காலங்களில், இந்த சாலை நெடுகிலும் மழைநீருடன், கழிவுநீர் குளம்போல் தேங்கி, சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், கிராம மக்கள் சாலையை பயன்படுத்த மிகுந்த சிரமம் அடைகின்றனர். சிலர் சேற்றில் வழுக்கி விழுந்து காயமடைவது தொடர்கதையாக உள்ளது. மேலும், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சேதமடைந்த சிமெண்ட் சாலையை சீரமைக்க கோரி, கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சிமென்ட் சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை