உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரியில் மா.கம்யூ., காத்திருப்பு போராட்டம்

புவனகிரியில் மா.கம்யூ., காத்திருப்பு போராட்டம்

புவனகிரி : புவனகிரி தாலுகா அலுவலகத்தில் மா.கம்யூ., சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, நகர செயலாளர் வேல்முருகன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஜெயசீலன், பாலமுருகன், மண்டல பொருளாளர் ஹசன்முகமது மன்சூர், ஒன்றிய குழு கோபிநாத், கிளை செயலாளர்கள் அஞ்சம்மாள், துர்கா, முத்துப்பாண்டி, வெங்கடேசன், பரசுராமன், ராமர், சின்னதுரை, சீனு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கொத்தட்டையில் பழங்குடி மக்களுக்கு சுடுகாட்டு பாதை அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அன்பழகன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை