கடலுாரில் மா.கம்யூ., மாநாட்டு கருத்தரங்கு
கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் மா.கம்யூ., சார்பில் 'சோசலிசமே மாற்று' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.மதுரையில் வரும் 2ம் தேதி முதல், 6ம் தேதி வரை மா.கம்யூ., சார்பில் நடக்கும் அகில இந்திய மாநாட்டை வலியுறுத்தி நடந்த இக்கருத்தரங்கில் மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன் வரவேற்றார்.செயலாளர்கள் பஞ்சாட்சரம், தேசிங்கு, சிவானந்தம், கண்ணன் முன்னிலை வகித்தனர்.கருத்தரங்கை திரைப்பட இயக்குனர் ராஜூ முருகன் துவக்கி வைத்தார். மத்தியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் களப்பிரன் பேசினர்.கருத்தரங்கில் செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கருப்பையன், ராமச்சந்திரன், சுப்புராயன், திருவரசு, ரவிச்சந்திரன், தேன்மொழி, ராஜேஷ்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். மாநகர செயலாளர் அமர்நாத் நன்றி கூறினார்.