உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மழையிலும் துாய்மைப்பணி: நகராட்சிப் பணியாளர்கள் தீவிரம்

மழையிலும் துாய்மைப்பணி: நகராட்சிப் பணியாளர்கள் தீவிரம்

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி பகுதியில் மழையிலும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையொட்டி, விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் பொது மக்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர். வடகிழக்கு பருவமழை துவங்கி தீவிரமாக பெய்து வரும் நிலையில் நகரம் முழுவதும் பட்டாசு வெடித்து காகிதங்கள், மருந்துகள் சிதறி கிடந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடாது மழை பெய்து வரும் நிலையில், , துாய்மை பணியாளர்கள் வழக்கம்போல பொது மக்களிடம் குப்பைகளை சேகரித்து சென்றனர். மேலும், வீதிகளில் ஆங்காங்கே சிதறி கிடந்த பட்டாசு கழிவுகள், குப்பைகளை சுத்தம் செய்தனர். பஸ் நிலையம், பாலக்கரை ரவுண்டானா, பெரியார் நகர், ஆலடிரோடு, எம்.ஆர்.கே., நகர், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை சுத்தம் செய்து, அப்புறப்படுத்தினர். அடை மழை என்றும் பாராமல், விருத்தாசலத்தில் நகராட்சி துாய்மைப் பணியாளர்களின் பங்களிப்பு, பொதுமக்களிடம் பாராட்டை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை