உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முரளீதர சுவாமியின் சத்சங்கம் கடலுாரில் 13ம் தேதி நடக்கிறது

முரளீதர சுவாமியின் சத்சங்கம் கடலுாரில் 13ம் தேதி நடக்கிறது

கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பத்தில் மஹாரண்யம் முரளீதர சுவாமியின் சத்சங்கம் வரும் 13ம் தேதி நடக்கிறது. ஐப்பசி மாத சுவாதி நட்சத்திரத்தையொட்டி மஹாரண்யம் முரளீதர சுவாமியின் மகாமந்திர அகண்ட நாமம் மற்றும் சத்சங்கம், மகாபிரசாதம் நிகழ்ச்சி, கடலுார் மஞ்சக்குப்பம் விஜய் சூர்யா ஹோட்டலின் ஸ்ரீவேதா ஹாலில் வரும் 13ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று காலை 11:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, அகண்ட மகாமந்திர கீர்த்தனமும், 5:30 மணி முதல் 6:30 மணி வரை பக்தர்களின் சத்சங்க அனுபவங்களும், 6:30 மணி முதல் 7:30 மணி வரை சுவாமியின் சீடர் ராமானுஜம், குரு மகிமை ப்ரவசனம் செய்கிறார். ஏற்பாடுகளை காட் இந்தியா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !