உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி ஸ்கொயர் மாலில் இசை கச்சேரி

வி ஸ்கொயர் மாலில் இசை கச்சேரி

கடலுார்; கடலுார் வி ஸ்கொயர் மாலில், செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்களின் இசைக் கச்சேரி நடந்தது.மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் நசியான் கிரகோரி ஆசியுரை நிகழ்த்தினார். நர்சரி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாலன் வாழ்த்துரை வழங்கினார். இதில், மாணவர்கள் விஷ்வா, கவுதம், மாணவி கனிஷ்கா ஆகியோர் பாடல் பாடினர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் நினைவு பரிசு வழங்கினார்.இசைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ராஜன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். அப்போது, மால் இயக்குனர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை