இசை கருவிகள் பயிற்சி துவக்கம்
கடலுார், ; கடலுார் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இசைக் கருவிகள் வாசிக்கும் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்லப்பன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) இஸ்மாயில் முன்னிலை வகித்தனர். வாய்ப்பாட்டு, டிரம்ஸ், கீ போர்டு, கித்தார், தபேலா உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பள்ளி முதல்வர் நசியான் கிரகோரி, பாலர் பள்ளி தலைமையாசிரியர் ஆரோன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற் றனர்.