உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாடார் மகாஜன சங்க ஆலோசனை கூட்டம்

நாடார் மகாஜன சங்க ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் மாவட்ட நாடார் மகாஜன சங்க தேர்தல் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட முன்னாள் துணை தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். இணை செயலாளர் மாரிமுத்து, மண்டல செயலாளர் உத்திரகுமார் முன்னிலை வகித்தனர். வடலுார் நகர செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். வரும் 17 ம் தேதி நடக்கும் மாவட்ட சங்க தேர்தலுக்கு, நெய்வேலி நாடார் மகாஜன சங்க உறுப்பினர் வேல்முருகன் மாவட்ட தலைவராகவும், ராஜா செயலாளர் வேட்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், தலைவர் சபாபதி வேல், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் பாலமுருகன், மாரிமுத்து, செந்தில், தமிழ்வாணன், கண்ணன், பினுகுமார், காமராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். நடராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி