உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெயர் பலகை திறப்பு விழா

பெயர் பலகை திறப்பு விழா

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சி சார்பில் ரயிலடியில் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள தெருக்களின் பெயர்களை உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில்23 லட்சம் ரூபாய் மதிப்பில், அனைத்து தெருக்களிலும் தெரு பெயர் பலகை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் 136 தெருக்களில், முதல் கட்டமாக 102 தெருக்களில் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று பரங்கிப்பேட்டை அகரம் ரயிலடியில் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி, பெயர் பலகையை திறந்து வைத்தார். துணைச் சேர்மன் முகமது யூனுஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் துணைச் சேர்மன் செழியன் முன்னிலை வகித்தனர்.விழாவில், கவுன்சிலர்கள் ஆனந்தன், அருள்முருகன், தையல்நாயகி, கணேசமூர்த்தி, பசிரியாமா ஜாபர் அலி,ரொகையமா குன்முகமது, ஜாஸ்மின் நிகார் அஜீஸ் அகமது, துப்பரவு மேற்பார்வையாளர் வீர ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை