உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆருத்ரா தரிசன விழாவில் நந்தனார் பட ஊர்வலம்

 ஆருத்ரா தரிசன விழாவில் நந்தனார் பட ஊர்வலம்

சிதம்பரம்: சிதம்பரத்தில் நந்தனார் கல்வி கழக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஓமகுளத்தில் உள்ள மடத்தில் நடந்த கூட்டத்திற்கு நந்தனார் கல்வி கழக தலைவர் மணிரத்தினம் தலைமை தாங்கினார். கல்வி கழக செயலாளர் திருவாசகம், டிரஸ்ட் செயலாளர் வினோபா, பொருளாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கஜேந்திரன் வரவேற்றார். இதில் மணிரத்தினம் பேசியதாவது: வரும், 3 ம் தேதி ஆருத்ரா தரிசன உற்சவத்தில், மடத்திலிருந்து நந்தனார் உருவப்பட ஊர்வலம் நடைபெறும். இதில் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பங்கேற்கிறார். வரும் ஜன., 28 ம் தேதி மடத்தில் சிவலோகநாதர் சவுந்தரநாயகி, நந்தனார் தியான மண்டபம் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தியான மண்டபம் புதுப்பித்து திறக்கப்பட உள்ளது. அதில் நந்தனார், சுவாமி சகஜானந்தா வரலாறு நிர்மானிக்கப்பட உள்ளது. 51 தேசிய தலைவர்கள், 10 இந்திய ஜனாதிபதிகள் வந்து சென்ற மடம். கடந்த, 1934 ல் காந்தி, 2 நாட்கள் இங்கு வந்து தங்கினார். அப்படிப்பட்ட புனித இடத்தை உலகறிய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்வில், காங்., முன்னாள் மாநில இளைஞரணி செயலாளர் கமக்கண்ணன், மாநில துணைத்தலைவர் அரவிந்த், ரவி, தமிழரசன், ஜெயசீலன், கல்வி கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !