உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய பென்காக் சிலாட் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வரவேற்பு

தேசிய பென்காக் சிலாட் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வரவேற்பு

கடலுார்: தேசிய அளவிலான பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற கடலுாரைச் சேர்ந்த வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய அளவிலான 13வது பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டி, சிங்கா, மக்கான், பிரி டீன், பிரி ஜூனியர், ஜூனியர் ஆகிய பிரிவுகளில் கர்நாடகா மாநிலம், கொப்பல் கேலோ இந்தியா உள் விளையாட்டு அரங்கத்தில் செப். 26 முதல் 28ம் தேதி வரை நடந்தது. தமிழ்நாடு அணியில் கடலுார் மாவட்ட வீரர், வீராங்கனைகள் 18 பேர் உட்பட மொத்தம் 54 பேர் பங்கேற்றனர். அதில் கடலுார் மாவட்ட வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் ஒரு தங்கம், ஒரு சில்வர், நான்கு வெண்கலம் உட்பட ஏழு பதக்கங்களை வென்றனர். பதக்கங்களை வென்று கடலுார் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு கடலுார் மாவட்ட பென்காக் சிலாட் அசோசியேஷன் செயலாளர் இளையராஜா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை