மேலும் செய்திகள்
மக்கள் நீதிமன்றத்தில் 1563 வழக்குகளுக்கு தீர்வு
14-Sep-2025
கடலுார் : கடலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நடத்திய தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,422 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தல்படி, 'லோக் அதாலத்' எனும் தேசிய மக்கள் நீதிமன்றம், கடலுாரில் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தலைமை தாங்கினார். குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சோபனா தேவி, மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் முதலாவது சிறப்பு கோர்ட் மாவட்ட நீதிபதி ஆனந்தன், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சரஸ்வதி, மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் 2வது சிறப்பு மாவட்ட நீதிபதி பிரகாஷ், குற்றவியல் நீ தித்துறை நடுவர் தனம், முதன்மை சார்பு நீதிபதி ராஜேஷ்கண்ணன், முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி கவியரசன், 2வது கூடுதல் சார்பு நீதிபதி பத்மாவதி, சார்பு நீதிபதிகள் லலிதா ராணி, நிஷா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜாகுமரேசன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பெபேயா, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஸ்ரீநிதி, புவனேஷ்குமார் முன்னிலை வகித்தனர். பார் அசோசியேஷன் தலைவர் பார்த்தசாரதி, செயலாளர் லெனின், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் ராம்சிங், செயலாளர் யுவராஜ் கலந்து கொண்டனர். மோட்டார் வாகன விபத்து, சிவில், ஜீவனாம்சம், தொழிலாளர், சமரசம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள், பணம் மோசடி, நில எடுப்பு, குடும்ப நலன் சார்ந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் விவாகரத்து வழக்கில் சமரசம் பேசி முடிக்கப்பட்டு 8 தம்பதிகள் சேர்ந்து வாழ ஒப்புக் கொண்டனர். சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி கோர்ட்டுகளிலும் அந்தந்த நீதிபதிகள் முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்டம் முழுவதும் 3, 001 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 2,422 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, 34 கோடியே ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 42 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
14-Sep-2025