மேலும் செய்திகள்
வீனஸ் பள்ளியில் விழிப்புணர்வு
22-Aug-2025
சிதம்பரம் : சிதம்பரம் வீனஸ் மெட் ரிக் பள்ளியில் தேசிய விளை யாட்டு தினம் நடந்தது. அனையொட்டி, பள்ளி அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. வீனஸ் குழும பள்ளி நிறுவனர் குமார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ரூபியால் ராணி முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் செல்வகுமார் வரவேற்றார் . சிறப்பு அழைப்பாளர் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசேகரன் தேசிய கொடி ஏற்றி, போட்டிகளை துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாக இயக்குநர் அருண், தலைவர் லியோனா பள்ளி கொடி ஏற்றினர். 9ம் வகுப்பு மாணவர் அஸ்வின் தேசிய பிரமாணம் ஏற்கப்பட்டது. பள்ளி முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபி கிரேஸ் போனிகலா ஒருங்கிணைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் சிறந்த அணிக்கு பரிசு வழங்கப்பட்டது. ரேவதி நன்றி கூறினார்.
22-Aug-2025