உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோர்ட் உத்தரவிட்டும் பட்டா வழங்குவதில் அலட்சியம்: சப் கலெக்டரிடம் மனு

கோர்ட் உத்தரவிட்டும் பட்டா வழங்குவதில் அலட்சியம்: சப் கலெக்டரிடம் மனு

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த இடத்தில் குடியிருந்து வரும் கும்பத்தினருக்கு பட்டா வழங்க கோரி சப் கலெக்டரிடம் மனு அளித்தனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த ருத்திரசோலை கிராமத்தை சேர்ந்த 24 குடும்பத்தினர் நேற்று சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், ருத்திரசோலை கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளாக கிரயம் செய்த, நிலத்தில் 24 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த இடத்திற்கு இதுவரை பட்டா வழங்காமல் உள்ளது. இது குறித்து தாசில்தார், சப் கலெக்டர் , கலெக்டர் என பல முறை மனு அளித்தும் பட்டா வழங்கப்படவில்லை. இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அரசு பட்டா வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இருந்தும் இதுவரை பட்டா வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தாசில்தாரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக பட்டா வழங்கி உத்தர விடவேண்டும் என அம் மனுவில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி