மேலும் செய்திகள்
பள்ளி ஆண்டு விழா
13-Jan-2025
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தலைமையாசிரியை பூங்கொடி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜமுரத்பீவி வரவேற்றார். சிப்காட் ஹிபாக் கலர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் சங்கர் சண்முகம், மனித வள மேலாளர் பத்மநாபன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். கவுன்சிலர்கள் ஆனந்தராஜ், கவிதா மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
13-Jan-2025