மேலும் செய்திகள்
ஸ்ரீவாரி பவன் ஓட்டல் திறப்பு
02-Aug-2025
கடலுார்: கடலுார் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் உணவு டெலிவரிக்கு புதிய செயலியை துவக்கினர். கடலுார் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கும் வகையில், 'சாரோஸ்' என்ற புதிய செயலியை துவக்கினர். கடலுாரில் நடந்த இதற்கான துவக்க விழாவில் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் ஆனந்தபவன் குரூப்ஸ் ராம்கி நாராயணன் தலைமை தாங்கினார். கடலுார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் துரைராஜ், உணவு டெலிவரி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சேவை தொடர்பான டெலிவரியை துவக்கி வைத்தார். 'சாரோஸ்' செயலி நிறுவனர் ராம் பிரசாத், செயலி குறித்து விளக்கிப் பேசினார். பின் அவர்கள் கூறுகையில், 'கடலுார் மாவட்ட மக்களுக்கு உள்ளூரில் உருவாக்கப்பட்ட 'சாரோஸ்' செயலி மூலம் மருந்தகம், காய்கறி, மளிகை, பேக்கரி உள்ளிட்ட 9 சேவைகள் வழங்கப்படுகின்றன. ஆர்டர் செய்யப்படும் உணவுகள், பொருட்கள் கடைகளின் விலைக்கே மக்களுக்கு வழங்கப் படுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் கமிஷன் தொகையை உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் பல ஊர்களில், ஓட்டல் உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடலுார் மாவட்டத்தில் ஓட்டல் தொழிலை பாதுகாக்க பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணிக்கவும், 'சாரோஸ்' செயலியை பயன்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.
02-Aug-2025