புது தொழில்நுட்ப பயன்பாடு : கடலுாரில் கருத்தரங்கு
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் இன்ஜினியர் தினத்தையொட்டி புது தொழில்நுட்ப பயன்பாடு குறித்த கருத்தரங்கு நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். பின், அவர் பேசுகையில், 'மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்பவும் எதிர்காலத்தின் தேவைக்கு ஏற்பவும் கட்டுமானப் பணிகளில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது இன்றியமையாத தேவையாகும். ஊரக வளர்ச்சி துறை மூலம் மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணி களில் பசுமை கட்டடங்கள் என்ற முறையில் தற்போது பயன்பாட்டில் உள்ள செங்கல்களுக்கு மாற்றாக மணல், எம்.சாண்ட், சிமெண்ட் போன்ற கலவையுடன் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது பராமரிப்பு செலவு குறைவதற்கு வாய்ப்பு ஏ ற்படும் . சாலைகளில் பயன்படுத்தப்படும் தாரின் தன்மை குறித்து தெரிந்து கொள்வதன் மூலம் சாலைகளின் வகைக்கேற்ப தாரினை பயன்படுத்திக் கொள்ள முடியும் . கட்டடங்களில் கான்கிரீட் மேற்கூரைக்கு மாற்றாக ஃபைபரிலிலான பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் விரைந்து குறிப்பிட்ட காலத்திற்கு பணியை முடிக்க முடி யும். பொதுமக்களின் தேவைக்கேற்ப குடிநீர் வினியோகம் செய்ய தேவையான மின் மோட்டார், குடிநீர் குழாயை தேவைக்கேற்ப பயன்படுத்தும் பட்சத்தில் பெரும்பாலான மதிப்பீடு செலவுகள் குறைவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது' என்றார். கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, செயற் பொறியாளர் வரதராஜ பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.