மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் பயன்படாத கழிப்பறை
20-May-2025
மந்தாரக்குப்பம், : நெய்வேலி ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் ஏ.டி.எம்., வசதி இல்லாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.நெய்வேலி ரயில்வே ஸ்டேஷன் வழியாக கடலுார்-திருச்சி, கடலுார்-சேலம், காரைக்கால் -பெங்களூரு பகுதிக்கு செல்லும் பாசஞ்சர் ரயில்கள் தினசரி செல்கின்றன. பஸ் கட்டணம் கூடுதலாக இருப்பதால் பாசஞ்சர் ரயில்களில் பயணிகள் அதிகளவில் சென்று வருகின்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து என்.எல்.சி., நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.இவர்கள் விருத்தாசலம், திருச்சி, சேலம், பெங்களுரூ உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்ல பாசஞ்சர் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க வரும் போது ரயில்வே ஸ்டேஷனில் ஏ.டி.எம்., வசதி இல்லாததால் அருகில் உள்ள ஏ.டி.எம்., மையங்களை தேடி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ஏ.டி.எம்., மையம் பயன்பாட்டிற்கு வராமல் பல ஆண்டுகளாக பூட்டியே உள்ளன. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் போது அவசரத்துக்கு பணம் எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் ஏ.டி.எம்., மையம் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20-May-2025