உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.ஜி.ஓ., செயல்பாடுகள் கல்லுாரி மாணவிகளுக்கு பயிற்சி

என்.ஜி.ஓ., செயல்பாடுகள் கல்லுாரி மாணவிகளுக்கு பயிற்சி

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ஷைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பில் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு என்.ஜி.ஓ.,செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.பவுண்டேஷன் நிறுவனர் பாபு பங்கேற்று என்.ஜி.ஓ., செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும் பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற மேம்பாடு, கல்வியின் அவசியம், போதை ஒழிப்பின் முக்கியத்துவம், இந்திய இறையாண்மையை பேணிக்காப்பதன் அவசியம் குறித்தும் பேசினார். நிகழ்ச்சியில் சங்கர், அரவிந்தன், வெங்கடேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பயிற்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை