உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., - சி.ஆர்.எஸ்., நிதியில் கிரிக்கெட் மைதானம் அமைக்க கோரிக்கை

என்.எல்.சி., - சி.ஆர்.எஸ்., நிதியில் கிரிக்கெட் மைதானம் அமைக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மேல்வளையமாதேவி ஊராட்சியில் கிரிக்கெட் விளையாட மைதானம் அமைத்து தர இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த மேல்வளையமாதேவி ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் என உள்ளனர். நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் கையகப்படுத்திய நிலத்தில் மைதானம் அமைத்து இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.ஊராட்சியில் இளைஞர்கள், சிறுவர்கள் விளையாட விளையாட்டு திடல், மைதானம் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மழைகாலங்களில் தற்போது விளையாடி வரும் இடத்தில் தண்ணீர் தேங்கி விடுவதால் இளைஞர்கள் விளையாட முடியவில்லை. விளையாட்டு மைதானம் அமைத்துதர புவனகிரி ஒன்றிய அதிகாரிகளிடமும், ஊராட்சி நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்து எந்த பலனும் இல்லை.நிலம் கையகப்படுத்திய என்.எல்.சி., நிறுவனம் சி.எஸ்.ஆர்., பொதுநிதியில் விளையாட்டு மைதானம் அமைத்துதர வேண்டும் என இளைஞர்கள் பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நேரடி ஆய்வு செய்து தனிக்கவனம் செலுத்தி மேல்வளையமாதேவியில் விளையாட்டு திடல் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி