உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., சுரங்கங்களுக்கு ஐந்து நட்சத்திர விருது

என்.எல்.சி., சுரங்கங்களுக்கு ஐந்து நட்சத்திர விருது

நெய்வேலி : என்.எல்.சி., சுரங்கங்களுக்கு, தேசிய அளவிலான மதிப்புமிக்க 5 நட்சத்திர மற்றும் 4 நட்சத்திர விருதுகளை வழங்கி, மத்திய நிலக்கரி அமைச்சகம் கவுரவித்துள்ளது.புதுடில்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில், தேசிய அளவில் சாதனை புரிந்த என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி மற்றும் அந்நிறுவன சுரங்கத் துறை இயக்குநர் சுரேஷ்சந்திர சுமன் ஆகியோருக்கு, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, இணை அமைச்சர் சதீஷ்சந்திர துபே ஆகியோர் விருதுகளை வழங்கினர்.மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்த நட்சத்திர மதிப்பீட்டு கொள்கை என்பது, நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதாகும். பல்வேறு அளவுருக்களின் அடிப்படையில் சுரங்கங்களை மதிப்பிடுவதற்கும், தரப்படுத்துவதன் அடிப்படையில் இந்த தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்ற 380 சுரங்கங்களில், என்.எல்.சி., சுரங்கங்கள் 80 சதவீத ஐந்து நட்சத்திர மதிப்பீடுகளை பெற்று தேசிய அளவில் சாதனை புரிந்துள்ளதால், இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை