உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., மஸ்துார் சங்கம் போராட்டம்

என்.எல்.சி., மஸ்துார் சங்கம் போராட்டம்

மந்தாரக்குப்பம் : நெய்வேலி இரண்டாம் சுரங்கம் நுழைவு வாயில் முன்பு என்.எல்.சி., பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. என்.எல்.சி.,-பி.எம்.எஸ்., தொழிற்சங்கம் சார்பில் நடந்த போராட்டத்திற்கு என்.எல்.சி., பாரதிய மஸ்துார் சங்க தலைவர் வீரவன்னியராஜா தலைமை தாங்கினார். காண்ட்ராக்ட் சங்க பொதுச் செயலாளர் விக்னேஷ்வரன் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள் அன்பழகன், சகாதேவ்ராவ், அருள்முருகன், பாபு, எழில்வேந்தன், கருப்பன், சங்கர், பாஸ்கர், வினோத், ராஜா பேசினர். என்.எல்.சி.,யில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும். என்.எல்.சி., யில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க வேண்டும். தீபாவளி முன்னிட்டு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஞானஜோதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி