உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., விஜிலென்ஸ் துறையின் விழிப்புணர்வு வார விழா நிறைவு

என்.எல்.சி., விஜிலென்ஸ் துறையின் விழிப்புணர்வு வார விழா நிறைவு

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி., விஜிலென்ஸ் துறை சார்பில், விழிப்புணரவு வார நிறைவு விழா நடந்தது.என்.எல்.சி., யில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வார நிறைவு விழா நடந்தது. என்.எல்.சி., விஜிலென்ஸ் துறை முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். இயக்குநர்கள் சமீர் ஸ்வரூப், பிரசன்ன குமார் ஆச்சார்யா, மத்திய தொழிலக பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., சிவக்குமார் முன்னிலை வகித்தனர். விஜிலென்ஸ் துறை முதன்மை பொது மேலாளர் இரணியன் வரவேற்றார். முதன்மை விருந்தினராக என்.எல்.சி.,சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி ' நெய்வேலி விஜில்' எனும் செய்தி மலரை வெளியிட்டு பேசுகையில்., அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு ஒழுக்கம் மற்றும் கொள்கைகளின் உணர்வை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டு முழுவதும் விழிப்புணர்வு தொடர்பான பரந்த அளவிலான விழிப்புணர்வு பிரசாரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.விஜிலென்ஸ் துறை முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாகண்ணு கோவிந்தராஜன் பேசினார்.கண்காணிப்புத் துறை பொது மேலாளர் சித்ரகலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை