உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., மண்வெட்டும் பணி தடுத்து நிறுத்தம் முத்துகிருஷ்ணாபுரத்தில் பரபரப்பு

என்.எல்.சி., மண்வெட்டும் பணி தடுத்து நிறுத்தம் முத்துகிருஷ்ணாபுரத்தில் பரபரப்பு

சேத்தியாத்தோப்பு,: ேத்தியாத்தோப்பு அடுத்த முத்துகிருஷ்ணாபுரத்தில் கூடுதல் இழப்பீடு தொகை கேட்டு என்.எல்.சி., நிறுவனம் மண்வெட்டும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேத்தியாத்தோப்பு அடுத்த கத்தாழை, மும்முடிசோழகன், ஊ.ஆதனுார், வளையமாதேவி ,கரிவெட்டி ஆகிய பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் முன்பு என்.எல்.சி., இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்தியது. 2006ம் ஆண்டு முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்திய என்.எல்.சி,, நிறுவனம் ஏக்கருக்கு 6 லட்சம் ரூபாய் வழங்கி. மக்களுக்கு நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் மாற்று இடம் வழங்கி, பொதுமக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்தாண்டு முத்துகிருஷ்ணாபுரம் அருகே கரிவெட்டியில் வீடுமனை, நிலங்களை கையகப்படுத்திய என்.எல்.சி., ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் மாற்று மனை. வாழ்வாதாரத்தொகை வழங்கியுள்ளது. இதனால் விரக்தியடைந்த முத்துகிருஷ்ணாபுரம் மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கூடுதல் இழப்பீட்டு, வாழ்வாதார தொகை வழங்க வலியுறுத்தி நேற்று பகல் 12.30 மணியளவில் ஒன்று திரண்டு என்.எல்.சி., சார்பில் நடந்துவரும் மண்வெட்டும் பணியை தடுத்து நிறுத்தி இயந்திரங்களை வெளியேற்றினர். போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் இல்லாததால் என்.எல்.சி., அதிகாரிகள் மண்வெட்டும் பணியை தொடரமுடியாமல் திரும்பி சென்றனர். பொதுமக்கள் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் வராததால் 1.00 மணியளவில் தாங்களாகவே கலைந்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை