உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அலுவலகத்தில் புதிய வாகனங்கள் பதிவு செய்ய தேவையில்லை

 அலுவலகத்தில் புதிய வாகனங்கள் பதிவு செய்ய தேவையில்லை

புதிய வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு பதிலாக வாகனங்கள் விற்பனை செய்யும், டீலர்களேபதிவு செய்யும் முறை நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெருகி வரும் பணியை குறைப்பதற்கும், பணம் புரளுவதை ஒரு முடிவுக்கு கொண்டு வரவும்,மத்திய அரசு பிரத்யேக சட்டங்களை இயற்றியது. இந்த விதிமுறைகளை பல மாநிலங்கள் ஏற்றுக்கொண்டு அமல் படுத்தின. வாகன விற்பனையாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லாமலேயே வாகனத்தை விற்பனை செய்து, அதற்குரிய ஆர்.சி., புத்தகத்தையும் வழங்கி விடலாம் என்பதுதான் அந்த புதிய சட்டம். இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்தாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மோட்டார் வாகன சட்டம் மத்திய அரசுக்கு வேறாகவும், தமிழக அரசுக்கு வேறாகவும்இருக்க கூடாது. இதனால் பல இடையூறுகள் ஏற்படும் என கருதி, மத்திய அரசின் வாகன சட்டத்தைஅமல்படுத்த கோரி, தமிழகவாகன டீலர்கள் சங்கம் சென்னை கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது.அது தொடர்பாக, கமிட்டி ஒன்றை அமைத்து அதன்பரிந்துரையின் மீது சில திருத்தங்களை தமிழக செய்துள்ளது. அதன்படி வாகனங்களை இனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்து சென்று அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டியஅவசியம் இல்லை. அதற்கு பதிலாக விற்பனை செய்த ரசீதுகள் மட்டுமே எடுத்து சென்று அதிகாரிகளிடம் கையொப்பம்பெற்றுக்கொள்ள வேண்டியது தான். இது தொடர்பாக 'பேன்சி' நெம்பர் வாங்க வேண்டுமென்றாலும் நேரடியாக விண்ணப்பித்து பெறலாம்.வாகனத்தின் ஆர்.சி., ஸ்மார்ட் கார்டு ஆதார் அட்டை முகவரிக்கு தபாலில் வந்து சேரும். இந்த நடைமுறை கடந்த 1ம் தேதி முதல்துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி