மேலும் செய்திகள்
மின்னல் தாக்கி விவசாயி பலி
11-Oct-2025
புவனகிரி : புவனகிரி அருகே வயலில் சம்பா நடவுப்பணியில் ஈடுபட்டிருந்த, வடமாநில தொழிலாளி மின்னல் தாக்கி இறந்தார். மேற்கு வங்கம், பனப்பூர் சிங்கா பகுதியைச் சேர்ந்தவர் மங்கள்பவுரி, 35; இவர், நேற்று சக தொழிலாளர்களுடன் பு.உடையூரைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நாற்று பறித்து நடவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். மாலை அப்பகுதியில் மின்னல், இடியுடன் மழை பெய்தது. உடன் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அருகில் இருந்த கொட்டகையை நோக்கி ஓடினர். அப்போது மின்னல் தாக்கியதில் மங்கள்பவுரி சம்பவ இடத்திலேயே இறந்தார். லேசான காயமடைந்த 2 பேர் புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
11-Oct-2025