உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா நடந்தது. விலங்கல்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெகத்ரட்சகன் பேசினார். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் சதீஷ்குமார், உதவி திட்ட அலுவலர் செல்வமணி செய்திருந்தனர். ஒரு வாரம் நடந்த முகாமில், மாணவர்கள் சிறு சேமிப்பின் அவசியம், சைபர் கிரைம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை