சத்துணவு ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம்
கடலுார்: கடலுார் ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. கடலுார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரங்கசாமி, மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய விகிதம் தொடர்பாக கோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14ம் தேதி கலெக்டரிடம் மனு அளிப்பது. நவ., 1ம் தேதி முதல் கருப்பு மை இட்ட அஞ்சல் அட்டையை முதல்வருக்கு அனுப்புவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் அமுதா, தில்லையம்மாள், சுப்ரமணியன், ராமசாமி, செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். குமார் நன்றி கூறினார்.