உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இடையூறாக வாகன நிறுத்தம் போக்குவரத்து பாதிப்பு

இடையூறாக வாகன நிறுத்தம் போக்குவரத்து பாதிப்பு

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் கடைவீதியில் கார், வேன், இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை, மந்தாரக்குப்பம் கடைவீதி வழியாக தினசரி பஸ், லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதனால், இச்சாலையில் எப்போதும் பிசியாகவே காணப்படும். ஏராளமான தனியார் மண்டபங்கள், வணிக வளாகங்கள், வங்கிகள், கடைகள் உள்ளதால் இங்கு வரும் பொதுமக்கள் தங்களின் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் நடக்கிறது. பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை