மேலும் செய்திகள்
உடைந்த கால்வாய் சரி செய்யப்படுமா?
24-Oct-2025
நடுவீரப்பட்டு: மலையாண்டவர் கோவில் அடிவாரத்தில் இடிக்கப்பட்ட மேல்நிலைநீர்தேக்க தொட்டிக்கு பதிலாக, புதிய தொட்டி கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் அடிவாரத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து தற்போது, பழைய பாளையம், செட்டியார் தெரு, மீனாட்சி பேட்டை தெரு, கடைவீதி, மலையாண்டவர் கோவில் தெரு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த தொட்டி பழுதடைந்ததால் கடந்தாண்டு முழுமையாக இடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் மோட்டாரிலிருந்து நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: காலை நேரத்தில் பள்ளிக்கும், வேலைக்கு செல்பவர்கள் தண்ணீரை பிடித்து வைத்து விட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஒவ்வொரு பகுதியாக தண்ணீர் விடுவதால், காலதாமதம் ஆகிறது. இதுபோல குமளங்குளம் ஊராட்சி ராணிப்பேட்டையில் இடிக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு புதிய தொட்டி கட்டாததால் அவதிக்குள்ளாகிறோம். மாவட்ட நிர்வாகம் இப்பகுதிகளுக்கு புதிய மேல்நிலைநீர்தேக்க தொட்டி கட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
24-Oct-2025