உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அலற வைக்கும் ஹாரன் சத்தம் அதிகாரிகள் நடவடிக்கை தேவை

அலற வைக்கும் ஹாரன் சத்தம் அதிகாரிகள் நடவடிக்கை தேவை

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அலற வைக்கும் இருசக்கர வாகனங்கள் சத்தத்தால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கடலுார் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதி வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மந்தாரக்குப்பம் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் மற்றும் சைலன்சரில் அதிக சத்தத்துடன் கூடிய இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் செல்கின்றனர். இதனால், பொதுமக்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே, போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ