பூட்டி கிடக்கும் நுாலகத்தை பழுது பார்த்த அதிகாரிகள்
மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கடந்த காலங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பொது அறிவினை வளர்த்திட நுாலகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் புதியதாக நுாலகம் கட்டப்பட்டது. இந்த நுாலகங்கள் திறக்கப்பாடாமலேயே மூடியே கிடக்கிறது. இதனால் நுாலகத்தில் உள்ள புத்தகங்கள் வீணாகி வருகிறது.இந்த நுாலகங்கள் எதற்கு கட்டப்பட்டது என்பதே தெரியவில்லை. பூட்டியே கிடக்கும் நுாலகத்திற்கு பராமரிப்பு பணி என கடந்த ஆண்டு ஒரு சில லட்சங்களை செலவு செய்துள்ளனர்.இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் பூட்டியே கிடக்கும் நுாலகங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.