மேலும் செய்திகள்
நோயாளி உறவினருக்கு மருத்துவமனை அடையாள சீட்டு
10-Oct-2024
கடலுார் : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.கடலுாரைச் சேர்ந்த 9 வயது சிறுமி. தாய் இறந்துவிட்டதால், உறவினர் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். 4ம் வகுப்பு படித்து வரும் இவர், நேற்று முன்தினம் இரவு பிறந்தநாள் விழா ஒன்றுக்கு உறவினருடன் சென்றார்.அப்போது, புதுக்குப்பத்தை சேர்ந்த ரவி,60 என்பவர், சிறுமியை அருகில் உள்ள மறைவிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமி அழுதபடி சென்று, உறவினரிடம் கூறினார். இதுகுறித்த புகாரின்பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து முதியவர் ரவியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
10-Oct-2024