மேலும் செய்திகள்
பைக் மோதி முதியவர் படுகாயம்
02-Nov-2024
குள்ளஞ்சாவடி ; முதியவரை தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.குள்ளஞ்சாவடி அடுத்த மதனகோபாலபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 63. இவர் நேற்று முன்தினம் தனது வயலுக்கு சென்றபோது, அவருக்கு சொந்தமான மரங்களை சிலர் வெட்டியுள்ளனர். இதுகுறித்து ராஜேந்திரன் அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் ஆபாசமாக பேசி தாக்கினர். காயமடைந்த ராஜேந்திரன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.சம்பவம் குறித்த புகாரின் பேரில் தாக்குதலில்ஈடுபட்ட அப்பியம்பேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், அவரது மகன், கார்த்திக், காசிலிங்கம், அவரது மகன் ராஜசேகர் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
02-Nov-2024