ரயில் மோதி ஒருவர் பலி
பண்ருட்டி: தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத முதியவர் ரயில் மோதி இறந்தார்.பண்ருட்டி ரயில் நிலையத்திற்கும் மேல்பட்டாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையில் நேற்று முன்தினம் காலை 6:45 மணிக்கு விழுப்புரம்- திருவாரூர் ரயில் சென்றது. அப்போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 55 வயது நபர், ரயில் மோதி இறந்தார்.இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து திருவதிகை வி.ஏ.ஒ., லலிதா, கடலுார் ரயில்வே இருப்பு பாதை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தம்மன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.