மேலும் செய்திகள்
போதை மாத்திரை விற்பனை கடலுாரில் 2 பேர் கைது
09-Oct-2025
கடலுார்; கடலுாரில், ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் லாட்டரி மற்றும் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்க எஸ்.பி., ஜெயக்குமார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அவரது உத்தரவின்படி, கடலுார் டி.எஸ்.பி., ரூபன்குமார் மேற்பார்வையில், புதுநகர் இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளி அருகில் சந்தேகிக்கும்படி நின்ற 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், கடலுார், குண்டு உப்பலவாடி ஜெயராமன், 62; இவரது மனைவி மல்லிகா,55; மகன் சாரதி, 29; புதுப்பாளையம் பிரகாஷ், 44; என்பது தெரிந்தது. கடலுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் லாட்டரி விற்பனை செய்ததையும் ஒப்புக் கொண்டனர். ஜெயராமன் மீது 18 லாட்டரி விற்பனை வழக்கு, பிரகாஷ் மீது 3 லாட்டரி வழக்கு இருப்பதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ஜெயராமன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து, லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய 5 மொபைல் போன், லாட்டரி விற்ற பணம் 22 லட்சத்து 94 ஆயிரத்து 500 ரூபாய், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
09-Oct-2025