உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பின்னலுார் மாதிரி கிராமத்தில் ஒற்றை சாளர மையம் திறப்பு

பின்னலுார் மாதிரி கிராமத்தில் ஒற்றை சாளர மையம் திறப்பு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுார் மாதிரி கிராமத்தில் நீர், நிலவள திட்டத்தில் பரவனாறு உபவடி நில மீன்வளத்துறை சார்பில் ஒற்றை சாளர தகவல் மையம் திறப்பு விழா நடந்தது.பின்னலுார் ஊராட்சி கிராம சேவை மைய கட்டடத்தில் நடந்த விழாவிற்கு, மீன்வளத்துறை துணை இயக்குனர் வேல்முருகன் தலைமை தாங்கி ஒற்றை சாளர மையத்தை திறந்து வைத்தார்.உதவி இயக்குனர் ரம்யாலட்சுமி, ஆய்வாளர் அனுசியா, சார் ஆய்வாளர் கார்த்திக், ஊராட்சி தலைவர் பிரபுதாஸ் முன்னிலை வகித்தனர். பின்னலுார் கிராம மக்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், மீன் குட்டை அமைக்கவும் வலியுறுத்தினர். மீன்வளத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை, பாசனப்பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி