உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புத்தக திருவிழாவில் வாய்ப்பு: கிராமிய கலைஞர்கள் நன்றி

புத்தக திருவிழாவில் வாய்ப்பு: கிராமிய கலைஞர்கள் நன்றி

கடலுார்: கடலுார் 3வது புத்தகத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கியதற்காக கிராமிய கலைஞர்கள் கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.கடலுாரில் 3வது புத்தகத் திருவிழா கடந்த மார்ச் 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடந்தது. திருவிழாவில் தினமும் 3 கலைக்குழுக்கள் வீதம் 30 குழுவினரைச் சேர்ந்த 650 கிராமியக் கலைஞர்கள் பங்கேற்றனர்.தமிழர்களின் பாரம்பரிய தொன்மையான கலைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் மல்லர் கம்பம், கரகாட்டம், மயிலாட்டம், பம்பையாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு பாராட்டினர்.கிராமியக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பளிக்கவும், அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வந்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் வாய்ப்பளித்து சான்றிதழ் வழங்கியதற்காக, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை நேரில் சந்தித்து கிராமிய கலைஞர்கள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை