உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆர்கெஸ்ட்ரா உரிமையாளருக்கு வெட்டு கடலுார் அருகே தப்பியோடியவருக்கு வலை

ஆர்கெஸ்ட்ரா உரிமையாளருக்கு வெட்டு கடலுார் அருகே தப்பியோடியவருக்கு வலை

கடலுார், : கடலுாரில் ஆர்கெஸ்ட்ரா உரிமையாளரை கத்தியால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, பாகூர்பேட் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் விஜய்தேவா,27. இவர், புதுச்சேரியில் ஆர்கெஸ்ட்ரா நடத்தி வருகிறார். அதில், விழுப்புரத்தை சேர்ந்த சசி என்பவரது மனைவி மைதிலி பிரியதர்ஷனி, 36, பாடகியாக இருந்தார். இவருக்கு திருமணமாகி 13 ஆண்டு ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரிமிருந்து பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்துள்ளார்.இந்நிலையில், விஜய்தேவாவிற்கும், மைதிலிக்கும் பழக்கம் ஏற்பட்டு குழந்தைகளுடன் மயிலாடுதுறையில் 2 ஆண்டாக வசித்து வந்தனர். கடந்த ஓராண்டாக, கடலுார் பனங்காட்டு காலனியில் தங்கி இருந்தனர். அதே பகுதியில் இரவு நேர பிரியாணி கடை நடத்தி வந்தனர்.இதையறிந்த மைதிலியின் கணவர் சசி, நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், கடலுார் வந்து விஜய்தேவாவை ஆபாசமாக திட்டி, கத்தியால் தலை மற்றும் காலில் வெட்டிவிட்டு தப்பி சென்றார்.காயமடைந்த விஜய்தேவா, புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, சசியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி