மேலும் செய்திகள்
மாணவி மாயம்
31-Mar-2025
எரிந்த நிலையில் ஆண் சடலம் போலீசார் விசாரணை
23-Mar-2025
நடுவீரப்பட்டு,: நடுவீரப்பட்டு ஊராட்சியில் கட்டப்பட்ட மேல்நிலைநீர்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றாமல் காட்சிபொருளாக உள்ளது. நடுவீரப்பட்டு ஊராட்சி தெற்கு தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் கடந்த 2013--2014ம் ஆண்டு போர்வெல் போடப்பட்டு மேல்நிலைநீர்தேக்க தொட்டி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் மேல்நிலை நீர் தேக்கதொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் பைப் பழுதாகியது. இதனால் மேல்நிலைநீர்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றாமல் நேரடியாக பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றனர். காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி,கல்லூரி செல்பவர்கள் சரியான நேரத்திற்கு புறப்பட முடியாத நிலை உள்ளது. இதனால், மேல்நிலைநீர் தேக்க தொட்டி பொதுமக்களுக்கு பயன்படாமல் வீணாகிறது. எனவே, மேல்நிலைநீர்த் தேக்க தொட்டியின் பைப்களை சரி செய்து, தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
31-Mar-2025
23-Mar-2025