உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயிலில் அடிபட்டு பெயிண்டர் சாவு

ரயிலில் அடிபட்டு பெயிண்டர் சாவு

புதுச்சத்திரம் : புதுச்சத்திரத்தில் ரயிலில் அடிபட்டு பெயிண்டர் உயிரிந்தார்.புதுச்சத்திரம் அடுத்த கரிக்குப்பத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் இளையராஜா, 37; பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, புதுச்சத்திரம் பரங்கிப்பேட்டை செல்லும் சாலையில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளார். அப்போது, விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.தகவலறிந்த சிதம்பரம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி