உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரியில் பழனிசாமிக்கு வரவேற்பு

புவனகிரியில் பழனிசாமிக்கு வரவேற்பு

புவனகிரி: புவனகிரி பாலக்கரையில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, சேத்தியாத்தோப்பில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் பிரசார கூட்டத்தில் பங்கேற்க புவனகிரி வழியாக சென்றார். அவருக்கு புவனகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் புவனகிரி பாலக்கரையில், மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமையில், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முன்னாள் அமைச்சர் ஜெயபால், கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., சிதம்பரம் நகர பொருளாளர் அரிசக்தி பாண்டியன், ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கனகசிகாமணி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் முகம்மது நாசர், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயப்பிரியா, மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் சவுந்தரராஜன், இலக்கிய அணி மாவட்டத் தலைவர் ஜெயபாலன், தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் முத்தமிழ்ச்செல்வன், பாக்கியராஜ் உடனிருந்தனர். பாலக்கரையில் இருந்து காந்தி சிலை வரை நடந்து சென்று இரு பக்கமும் நின்றிருந்த மக்கள், தொண்டர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது, நீங்கள் முதல்வராக வேண்டும் என சிறுவன் கூறியதும் மகிழ்ச்சி அடைந்த பழனிசாமி, சிறுவனுடன் சிறிது துாரம் நடந்து சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை